மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் தனியார் மதுபான கூடம் அருகே மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ஒருவர் குத்திக் கொலை - இருவர் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிடந்த உடலை மீட்டு பார்த்தபோது உடலில் காயங்களும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பின்பு உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த நபர் பொள்ளாச்சி ஜே ஜே நகரை சேர்ந்த 21 வயதான அரவிந்த்சாமி என்பதும் ஓட்டுனராக பணிபுரியும் அரவிந்த் சாமிக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் நான்கு மாத பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.,
மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பைசல் மற்றும் மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.,
இதைத்தொடர்ந்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் பைசல், விமல் இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் சுற்றித்திரிந்த விமலை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் விமல் மற்றும் பைசல் இருவரும் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் வால்பாறை சாலையில் தள்ளி சென்றதாகவும் அப்பகுதியில் வந்த அரவிந்தை நிறுத்தி வாகனத்தை ஸ்டார்ட் செய்து தருமாறு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.,
அப்போது என்னால் முடியாது எனக்கூறி அரவிந்த் அங்கு இருந்து கிளம்ப முயன்ற போது விமல் மற்றும் பைசல் இருவரும் சேர்ந்து தாக்கியும் கத்தியால் குத்தியதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தலைமறைவாக உள்ள திமுகவை சேர்ந்த பைசலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Post a Comment