மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டத்தில் கல்குவாரிகளால் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு.
பொள்ளாச்சி அடுத்த நம்பர் 10 முத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கல்குவாரி தொடர்பான கருத்து கேட்க்கும் கூட்டம் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடந்தது இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ராமலிங்கம் மற்றும் சிவசாமி ஆகிய இருவருக்கும் சொந்தமான கல் குவாரிகள் நம்பர் 10 முத்தூர் மற்றும் சங்கராயபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குவாரிகளால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினர். அப்போது குறிப்பிட்ட கல்குவாரி உரிமையாளர்கள் நேரம் கடந்தும் விவசாயிகள் பேசிக் கொண்டிருப்பதாகவும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் நிலத்தடி நீரை உறிஞ்சும் விவசாயிகளால் இயற்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறிய குவாரி உரிமையாளர்கள் எங்களால் இயற்க்கை சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் விவசாயிகளால் இயற்கைக்கு ஆபத்து உள்ளது என்று வாதம் வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலன்., இந்த கல் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், விவசாய பயிர்களில் மகரந்த சேர்க்கை குறைந்து விட்டதாகவும், அதிகளவில் எடையை லாரிகள் மூலம் கிராம சாலைகள் வழியாக கொண்டு செல்வதால் அனைத்து சாலைகளும் உறுதித்தன்மை இழந்து சேதமடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் இந்த கல் குவாரிகள் தான் காரணம். இந்தியாவில் 146 பகுதிகளுக்கு (ISRO) விஞ்ஞானிகள் நிலச்சரிவு தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்று இப்படி குவாரிகள் பெருகிக்கொண்டே போனால் திடத்தன்மை இழந்து நிலச்சரிவு கண்டிப்பாக ஏற்படும் எனவே கல்குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment