மக்கள் வெளிச்சம் நாளிதழ்

*அன்னை பாத்திமா கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்*
*கல்லூரி முதல்வர் தேசிய கொடி ஏற்றினார்*

மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தேசிய கொடியேற்றி ஆற்றிய சுதந்திர தின  உரையில், நமது நாட்டிற்கு சுதந்திரம் எளிதாக கிடைக்கவில்லை என்றும் காந்தி, நேரு, நேதாஜி, பால கங்காதர திலகர்  உள்ளிட்ட பல தலைவர்களின் தன்னலமற்ற போராட்டத்தினால் கிடைத்தது எனவும், இத்தினத்தில் சுதந்திரப் போராட்ட  தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்ற வேண்டும் எனவும் கூறினார். 
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்,  மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாணவிகள் சுதந்திர  போராட்ட தலைவர்களைப் பற்றி உரையாற்றினர்.  இதைத் தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாணவி செல்ஷியா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அன்புச்செல்வி, விக்னேஸ்வர சீமாட்டி, அகிலா ராஜ் மற்றும் திலீபன் ஆகியோர் செய்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்