மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் கலைஞர் நினைவு தினம் 
தி.மு.க. வினர் மலர் தூவி மரியாதை 



பொள்ளாச்சியில்மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம்  அனுஷ்டிக்கப்பட்டது. அவரது நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர திமுக சார்பில் காந்தி சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் கண்ணப்பன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணைத் தலைவர் கௌதமன், நகர துணைச் செயலாளர் தர்மராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரி, பாத்திமா, செந்தில்குமார், பெருமாள், தங்கவேலு, துரைபாய், சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆனைமலை முக்கோணம் பகுதியில் நகர செயலாளர் டாக்டர் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் அபுதாகிர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஹிமாலயாஸ் யுவராஜ், மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் மருதமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்