மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறை அக்கா மலையில் தொழிலாளர்களை விரட்டிய யானை கூட்டம். 

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. கருமலை குரூப்  அக்கா மலை எஸ்டேட் பகுதியில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்து வரும் சித்ரா தேவி வயது 42 மற்றும் ராணி வயது 45 இருவரும் இன்று மாலை  4.10 மணி அளவில் கொழுந்து மூட்டையுடன் நிறுவை களத்திற்கு வரும் வழியில் எதிர்பாராமல் நான்கு யானை கூட்டம்  விரட்டியதால் சகத் தொழிலாளர்கள் சத்தமிட்டு ஓட்டம் பிடித்தனர். இருவர் கீழே விழுந்து வலது கை கால் முறிவு ஏற்பட்டு கருமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . கருமலை எஸ்டேட் மருத்துவமனை பகுதியில் இருந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும்  யானைகளின் அட்டகாசம அதிகரித்து வருகிறது வனத்துறையினர் யானைகள் மற்றும் வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேறகொண்டு பாதிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு எஸ்டேட் தொழிலாளர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்