மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்
இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
பொள்ளாச்சியை அருகில் தென் குமாரபாளையத்தைச் சேர்ந்த திருமலைசாமி வயது 63, சிஞ்சுவாடியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 48 நம்பிய முத்தூரை சேர்ந்த மனோகரன் வயது 27 ஆகிய நபரிடம் அடுத்தடுத்த 2 மணி நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களிடம் பட்டா கத்தியை வைத்து மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்துக் கொண்டு தப்பி நபர்களை அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர்
கார்த்திகேயன் கூறியது போல் குற்றம் புரிபவர்களை விரைந்து பிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார் அதே போல் வழிப்பறியில் ஈடுபட்ட சபரிராஜன் வயது 22, நல்லுகுமார் வயது 21, சுபாஷ் வயது 21,செல்வ கணபதி வயது 14 கமுதி தாலுக்கா ராம்நாடு மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் கொலை முயற்சி வாகன திருட்டு பணம் பறிப்பு கஞ்சா விற்பனை அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. கொள்ளையர்களைப் பிடித்த தனிப்பிரிவு காவலர் நவீன், காவலர் விக்னேஷ் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Comments
Post a Comment