மக்கள் வெளிச்சம் நாளிதழ்
ஆழியார் கவியருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஆழியார், ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்நிலையில் ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக மூடப்பட்டிருந்த கவி அருவி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக திறக்கப்பட்டது. தற்போது நேற்று மாலை 5 மணிக்கு மேல் மழையின் காரணமாக அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டு கவியருவி மூடப்பட்டது. அருவிக்கு தண்ணீர் வரத்து சீராகும் வரை தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment