மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கிணத்துக்கடவு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர்  பலி. 



பொள்ளாச்சி ஆகஸ்ட் 17
டெல்லி மாநிலம்  ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் அக்சத் ஹர்சானா (வயது 20), இவரும். ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுபித் (வயது 21) இவர்கள் இருவரும்  கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி  விடுதியில் தங்கியிருந்து பொறியியல் மூன்றாம் ஆண்டு கல்வி படித்து வருகிறார்கள். இன்று  கல்லூரி விடுமுறை என்பதால், அக்சத் ஹர்சானா, சுபித் மற்றும் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி பயிலும் சரண்ஸ் குமார் ஆகிய 3பேரும் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல கல்லூரியில் இருந்து புறப்பட்டு கோவை ரயில்நிலையம் சென்று அங்கு வாடகைக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் எடுத்துக்கொண்டு வால்பாறைக்கு  கிளம்பினார்கள் . இதில் ஒரு ஸ்கூட்டரில் சபித், அரஷத் ஹர்சானா இருவரும் முதலில் செல்ல பின்னால் இன்னெரு ஸ்கூட்டரில் சரண்ஸ்குமார் சென்றுள்ளனர். இவர்கள் கிணத்துக்கடவு பகுதியை கடந்து கோதவாடி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சாலையின் இடது ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியில் உரசியதில் கட்டுப்பாட்டை  இழந்த ஸ்கூட்டர் முன்னே நின்றிருந்த மற்றொரு காரின் பின்பகுதியில் வாகனத்தில் பயணம் செய்த சுபிக், அக்சப்ட் ஹர்சானா இருவரும் தூக்கி வீசப்பட்டு நான்கு வழிச்சாலையில் கீழே விழுந்தனர்.  அப்போது பின்னே வந்து கொண்டிருந்த மற்றொரு கார் ஸ்கூட்டர் மீது மோதியது.  இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சுபித்,
அக்சத் ஹர்சானா இருவரும் பலியானார்கள்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்