மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சுதந்திர தின விழாவில்
சிறந்த சேவைக்காக நகர்மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் அவர்களுக்கு பாராட்டு.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகா மற்றும் நியூட்ரோபதி மருத்துவர் டாக்டர் அர்ச்சனா முன்னெடுப்பில் மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்களின் யோகா நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில்
மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும்
பொள்ளாச்சி நகராட்சி 26வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எம் .கே சாந்தலிங்கம் அவர்களுக்கு சிறப்பான சேவையை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இதை எடுத்து பொள்ளாச்சி போட்டோகிராபர் அசோசியேசன் சார்பில் நோயாளிகளுக்கு இலவச ரொட்டி பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் கி
இரத்ததான முகாமும் நடைபெற்றது .
இறுதியில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்கள் துப்புரவாளர்கள் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கார்த்திகேயன் .இசக்கி முத்து. ரஞ்சித் மற்றும் செவிலியர்கள் நோயாளிகள் நல சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ் .கவிஞர் முருகானந்தம் ஜே.எஸ்.கிட்டான். நேதாஜி பேரவை விக்கி வி .எஸ் .ஆர் .கே .மோகன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment