மக்கள் வெளிச்சம் நாளிதழ்
78வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்,பின்னர் காவல்துறை மற்றும் ஊர் காவல் படை, பள்ளி மாணவ மாணவிகள், அரசு அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்தார், இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment