மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
பொள்ளாச்சி ஏரிப்பட்டியில் உள்ள சங்கவி வித்யா மந்திர் பள்ளியில், 11வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் 11வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ரமேஷ் பாபு, பொள்ளாச்சி சதுரங்க சங்கத்தின் தலைவர் கருணாநிதி, செயலாளர் பரமேஸ்வரன், எழில் மருத்துவமனையின் மருத்துவர் சங்கவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி போட்டியினை துவக்கி வைத்தனர்.
இப்போட்டியில் கோவை மாவட்ட அளவில் 236 பேர்
கலந்து கொண்டனர். வால்பாறை, மேட்டுப்பாளையம்,
காரமடை, பொள்ளாச்சி, ஆனைமலை, பல்லடம், சூலூர்,
கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுப்
பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி, 12 கல்லூரிகளை சேர்ந்த
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் 8, 10, 12, 15 மற்றும் 25 வயது என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம்
உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Comments
Post a Comment