மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரம் கிராமத்தில் வசித்து வந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரின் பெயரில் அதே பகுதியில் 4 சென்ட் இடத்தில் வீடு உள்ளது.
அந்த வீட்டை விற்க கணவன் சுரேஷ் முயற்சி செய்து வந்துள்ளார். இதை அறிந்த மனைவி சத்தியவாணி பொள்ளாச்சி
சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க கூடாது என தடங்கல் மனுவை கடந்த ஒன்பதாம் தேதி அளித்திருந்தார்,
ஆனால் சார்-பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல் தன் கணவனுக்கு சாதகமாக கடந்த 12ஆம் தேதி வேறு ஒரு நபருக்கு வீட்டை கிரையம் செய்து கொடுத்துள்ளார். அதை அறிந்த மனைவி சத்தியவாணி தனது இரு குழந்தைகளுடன் சார் -பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பத்திர பதிவு செய்வதற்காக வந்திருந்த பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மோசடி செய்து தனது வீட்டை கிரையம் செய்ததை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் கணவன் சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வர சொல்லி உத்தரவிட்டார்.
மேலும் பத்திர பதிவு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் உரிய தீர்வு கண்டு பத்திரபதிவை ரத்து செய்யப்படும் என சார் - பதிவாளர் செல்வக்குமார் தெரிவித்ததை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண் அங்கிருந்து கலைந்து சென்றார்
Comments
Post a Comment