மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை வருகிற 28.07.2024 முதல் 30.07.2024 முடிய மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. மேற்படி 28.07.2024 30.07.2024 வரை மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவும்,மலைப்பாதையில் நடைப்பாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மலை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ச. ஜெயகுமார், துணை ஆணையர் / செயல் அலுவலர் இரா. செந்தில்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வி.மகேஷ்குமார், ப.பிரேம்குமார், ஆ.கனகராஜன், வி.ஆர்.சுகன்யாராசரத்தினம், ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Comments
Post a Comment