மக்கள் வெளிச்சம் நாளிதழ்

புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்தால் 

நிச்சயம் உரிய தீர்வு காணலாம் 

 
 புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்தால் நிச்சயம் உரிய தீர்வு காணலாம் என பொள்ளாச்சியில் நடைபெற்ற முகாமில் சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள கே.எம். மருத்துவமனையில்  இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்க வைத்தார். இதில் சிறப்பு மருத்துவர்கள் மணிவண்ணன், ராஜதரங்கணி உள்ளிட்ட மருத்துவ குழுவினர்  முகாமிற்கு வந்த பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். 
முகாம் குறித்து சிறப்பு மருத்துவர் மணிவண்ணன் கூறுகையில், தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது பரவலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது.
உணவு பழக்க வழக்கங்களில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதுபோன்ற நோய்களுக்கு முக்கிய காரணமாகிறது.  மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக அவ்வப்போது முறையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டால் இதுபோன்ற நோய்கள் பாதிப்பு இருப்பின் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறு அறிந்து கொண்டால் புற்றுநோய்க்கு துவக்கத்திலேயே சிகிச்சை ஆரம்பித்தால் இந்நோயிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காவல்துறையினர் குறிப்பாக பெண் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் முகாமில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்