மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் சாலையை கடக்க முயன்ற நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதி பலி 


விபத்தை ஏற்படுத்திய ஒர்கஷாப் தொழிலாளி கைது

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி(58), இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார், வீட்டிலிருந்து பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கி சாலையை கடந்துள்ளார். அப்போது உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது இதில், பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார் இச் சம்பவம் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாணையில் விபத்தை ஏற்படுத்திய நபர் நாகூர் பகுதியை சேர்ந்த வஞ்சிமுத்து என்பதும் அவர் ஒர்க்ஷாப் தொழிலாளி என்பது தெரிய வந்தது இந்நிலையில் நாகூர் பகுதியில் பதுங்கி இருந்த வஞசிமுத்துவை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த நீதிபதி கருணாநிதி உடல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து சின்னாம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது அவரது உடலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த நீதிபதிகள் உயரதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் போலீசார் அஞ்சலி செலுத்தினர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்