மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் திமுகவினர் மாம்பழத்தைப் பிழிந்து கொண்டாட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் திமுகவினர்நூதன முறையில் மாம்பழத்தை பிழிந்தும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் கொண்டாடினார் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டியில் தொகுதியில் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது இதை அடுத்துதிமுக மற்றும் பாமக, நாம் தமிழர் கட்சியினர் தேர்தலில் களம் கண்டனர், அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர் அதைத் தொடர்ந்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சிநகர மன்ற தலைவர் சியாமளா தலைமையில் திமுகவினர் நூதன முறையில் மாம்பழம் கையில் வைத்து பிழிந்தும் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் திமுகவினர் நூதன முறையில் வெற்றியை கொண்டாடியது பொள்ளாச்சி பகுதியில் வியப்பாக பார்த்தனர்,இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார்,வார்டு உறுப்பினர்கள் நாச்சிமுத்து பாத்திமா, கவிதா, போர்வெல் துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment