மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூரில் 1400 கிலோ புகையிலை பொருட்கள் கார் பறிமுதல் 

மூன்று பேர் கைது



கோவை:-ஜூலை-11 கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பநாயக்கன்பட்டி  கலங்கல் சாலையில் உள்ள கலங்கல் சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர் அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக  வந்த சொகுசு காரை  சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது  புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு மற்றும் பாரதி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து *200 கிலோ  புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை  பறிமுதல் செய்து மேலும் விசாரணை செய்ததில் அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள குடோனில் சுமார் 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் காவல்துறையினர் அங்கு சென்று  சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவரை கைது செய்து பதுக்கி வைத்திருந்த சுமார் 1200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சுரேஷ் பாபு பாரதி மற்றும் தென்னரசு ஆகியோரிடமிருந்து ரூபாய் 12,71,904 மதிப்புள்ள 1400  கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து  நீதிமன்ற ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் சூலூர் பகுதியில் சிந்தாமணிபுதூர் சந்திப்பு அருகே ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த மற்றொரு ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்று சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் சிங்காநல்லூர் பகுதியை  பாலமுருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 100 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்