மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் போதை ஊசி விற்பனை செய்த பாஸ்கரன் என்பவர் கைது          கிழக்கு காவல் நிலையம் போலீசார் அதிரடி 

பொள்ளாச்சி கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் குட்கா பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகின்றனர்,மேலும் பான் மசாலா குட்கா விற்பனை செய்யும் பழைய குற்றவாளிகள் போலீசார் கண்காணித்து வருகின்றனர்,இந்நிலையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு போதை ஊசி விற்பனை செய்வது ரகசிய தகவல் வந்தது அடுத்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர் இந்நிலையில் வெங்கடேச காலணி பகுதியில் போதை ஊசி மற்றும் குப்பிகள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது,மாறுவேடத்தில் சென்ற போலீசார் போதை ஊசி வைத்திருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த பொழுது சூளேஸ்வரன் பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் எனும் சுதாகர் என்பதும இவர் நகரின் பல்வேறு பகுதிகளில் போதை ஊசி மற்றும் குப்பிகளை விற்பனை செய்தது தெரிய வந்தது  இதை அடுத்து அவர் வைத்திருந்த 15 போதை ஊசி மற்றும் 355 குப்பிகளை பறிமுதல் செய்த போலீசார் பாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசி பிடிபட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்