மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள உள் நோயாளர் பிரிவு கட்டண அறைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்துவைத்து பார்வையிட்டார்.



கோவை  மாவட்டம், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.72இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் நோயாளர் பிரிவு கட்டண அறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  திறந்துவைத்து பார்வையிட்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி,  பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா  இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.என்.இராஜசேகரன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.அருணா,   பொள்ளாச்சி நகராட்சி நகர்மன்ற தலைவர், சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணைத் தலைவர் எஸ்கௌதமன்,  நகர்மன்ற உறுப்பினர்  எம்.கே.சாந்தலிங்கம்,பொள்ளாச்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜா  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்ததாவது,
தமிழக முதல்வர்  வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மக்களின் வீடுகளுக்கே நேரடியாக தேடி சென்று நீரிழிவுநோய், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டவைகளுக்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1 கோடியே 74 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவில்   நம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் எப்படி செயல்பாடுத்தப்படுகுிறது என்கின்ற விவரங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் கேட்டு வருகின்றார்கள். 
இன்னுயிர் காப்போம்,  நம்மை காப்போம் 48, உள்ளிட்ட திட்டங்கள்  தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டன.  இன்னுயிர் காப்போம் திட்டம் 694 மருத்துவமனைகளில் செயல்பாட்டில் உள்ளது. யாருக்காவது விபத்து ஏற்பட்டால், அவரை  உடனடியாக மீட்டு மருத்துவமனை சேர்ப்பவருக்கு அரசின் சார்பில் ரூ.5000 ஊக்கத்தொகையாக இலவச வழங்கப்படும். அடிபட்டவருக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அரசின் சார்பில் ரூ.1இலட்சம் மதிப்பில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தமிழ்நாட்டில் 2,54,256 பேர் விபத்துகளில் இருந்து காப்பற்றப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்  தமிழக முதல்வர்  நிதிநிலை அறிக்கையின்போது, சாலை விபத்துகளில் அடிப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 48 மணிநேரத்திற்குள் வழங்கப்படும் சிகிச்சைக்கான தொகையை ரூ.1.இலட்சத்திலிருந்து, ரூ.2இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். 
கோவை  மாவட்டம், மலுமிச்சம்பட்டி கிராமத்தில் 27.06.2023 அன்று இதயம் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 3 வகையான 14 மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகின்றவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டு உயிர் காப்பாற்றப்படுகின்றது. பொள்ளாச்சி அருகில் பகுதிகளில், இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் யாருக்காவது மாரப்படைப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெற பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரவேண்டும். ஆனால் தற்போது இத்திட்டத்தின் கீழ் அந்த ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்  உடனடியாக மருந்துகள் வழங்கப்பட்டு உயிர் காப்பற்றப்பட்டு உயர் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் 8713 துணை சுகாதார நிலையங்கள், 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில்14 மாத்திரைகள் தொகுப்பு வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களின் விவரங்களை எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள மருத்துவமனைகளில் கேட்டுவருகிறேன். இத்திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 7902 பேரும், துணை சுகாதார நிலையங்களில் 509 பேரும் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கோவை  மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 405 பேரும், துணை சுகாதார நிலையங்களில் 3 பேரும்  என மொத்தம் 408 பேர் பயன்பெற்றுள்ளனர்.
ரெட்டியாருர் கிராமத்திற்கு காலை 12 கிலோ மீட்டர் நடந்து சென்று அங்குள்ள துணை சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். கடந்த ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடிக்கு மருந்து கிடையாது. பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வரவேண்டும். ஆனால் தற்போது துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புகடிக்கு மருந்துகள் கிடைக்கின்றது. அதன்படி,   அந்த சுகாதார நிலையத்தில்  மருந்து பெற்று பயன்பெற்றவர்களின் பட்டியலை ஆய்வு செய்து அதில் சிகிச்சைபெற்ற பயனாளிஒருவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்கொண்டு விசாரித்தேன். 
மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. அரசு மருத்துவ சேவையினை மக்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். காப்பீட்டு திட்டத்திற்காக அரசால் மொத்தமாக ரூ1500 கோடி வழங்கப்படுகின்றது. இந்த தொகை தனியார் மருத்துவ மனைகளுக்கு மட்டுமில்லாமல் அரசு மருத்துவ மனைகளுக்கும் சென்றடையவேண்டும்.  பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  கட்டணப் படுக்கை அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில்(single cot) ஒரு படுக்கை,  டிவி, ஹீட்டருடன் கூடிய கழிவறை, ஆக்ஸிஜன் பைப் வசதிகளுடன் உள்ளது. இந்த அறைக்கு ரூ.1000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  டீலக்ஸ் மற்றும் உயர்வகை அறைகளுக்கு வாடகையை ரூ.2000 மற்றும் ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். பொள்ளாச்சி நகராட்சியில் இந்த மருத்துவமனையில் கட்டண அறை திறந்திருப்பதால், இத்திட்டம் மக்களிடம் மிகச் சிறப்பாக சென்றடையவேண்டுமென்றால் சிறப்பு கட்டணம் இல்லாமல் இரண்டுபடுக்கைகள்(double cot) வாடகையை ரூ.1500 ஆக நிர்ணயிக்குமாறு கூறியிருக்கிறேன். 
கடந்த நிதியிலை அறிக்கையில் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறை திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படீ,தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டணப் படுக்கை அறை என்பது நம்முடைய பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.  சென்னை ராஜீவ் காந்தி  மருத்துவமனை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களின் மருத்துவமனைகளில் இது போன்ற கட்டணப் படுக்கை (pay ward)திறந்து வைக்கப்பட்டது.  பொள்ளாச்சியை சுற்றி உள்ள மக்கள் அரசின் இந்த சேவை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடம், காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் ரூ.22.75 இலட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டடம்  திறந்துவைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 19 எண்ணிக்கையில் தான் இருந்தன.   தமிழக முதல்வரின் தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு தற்போது 24 மாவட்ட தலைமை மருத்துவமனைகள்  ரூ.1018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளிலும், 63 நகராட்சிகளிலும், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்துவைக்கப்படும் என 110 லிதியின் கீழ்  தமிழக முதல்வர்  அறிவித்தார்கள்.  அதில் கோவை  மாவட்டத்திற்கு 72 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்  அறிவிக்கப்பட்டன. இதில்  தமிழக முதல்வர்  சென்னையிலிருந்து 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதில் கோவை  மாநகராட்சியில் - 45 இடங்களிலும், மேட்டுப்பாளையம் நகராட்சி – 1, பொள்ளாச்சி நகராட்சி – 2, வால்பாறை நகராட்சி – 1 ஆகிய 49  இடங்களில்   திறந்து வைத்தார்கள். மேலும் மீதமுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களின்  கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன. 
 தமிழக முதல்வர்  கடந்த மூன்று ஆண்டுகளில்  கோவை  மாவட்டத்தில் பல்வேறு வகையான மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்துள்ளார்கள்.  நானும் 20 முறைக்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வருகைதந்து ஒவ்வொரு முறையும் ஏராளமான கட்டடங்களை திறந்துவைத்துள்ளேன். மேலும், 39 கட்டடங்கள் ரூ.22.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி மருத்துவமனையில்  ரூ.2.08கோடி மதிப்பில் உயர் அழுத்த மின் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்