மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்களுக்கு திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி  நகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நகர மன்ற உறுப்பினர் பெருமாள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ் மணி கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி,இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில்  நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகராட்சி துணைத் தலைவர் கௌதம்  நகர துணைச் செயலாளர் தர்மராஜ் கவுன்சிலர் செந்தில் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்