மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் இரத்ததான கொடையாளர்கள் தின விழா


பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் உலக ரத்ததான கொடையாளர்கள் தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஜூன் 14ஆம் தேதி சர்வதேச தன்னார்வ ரத்ததான கொடையாளர்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மற்றும் தேர் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களிடையே ரத்ததானம் செய்வது குறித்தும்...ஒவ்வொரு தனி மனிதரும் வாய்ப்பிருக்கும்போது ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும் மேலும் நாளுக்கு நாள் பாதுகாப்பான ரத்தத்தின் தேவை மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த தேவையை பூர்த்தி செய்வதில் தன்னார்வ ரத்தக் கொடையாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் பொதுமக்களிடையே பேசினார் இந்நிகழ்ச்சியில் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் மற்றும் நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் தளபதி நவீன் சுந்தரராஜ் மற்றும் என். ஜி  எம் கல்லூரி என்சிசி உள்ளிட்ட மாணவர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பேரவையைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்