மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை பேரூர் கலிக்கநாயக்கன் பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம்
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில், மணிமஹால் மண்டபத்தில் எதிர் வரும். 12.06.2024 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் 07.06.2024 வெள்ளி கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் கலிக்கநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில். பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்கள்.
பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 12.06.2024 அன்று கலிக்கநாயக்கன்பாளையம் மணிமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார்கள்
Comments
Post a Comment