மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் பகுதிகளில் அதிரடி கஞ்சா வேட்டை 



 கோவை சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் மாதையன் ஆலோசனையின் படி உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மற்றும் வாகன தணிக்கை மேற்கொண்டனர் பாப்பம்பட்டி இடையர் ரோடு அருகே சந்தேகப்படும்படியான நபர் கையில் வெள்ளை பையுடன் நின்றிருந்தவரை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லவே அவரது பையை சோதனை  செய்த போது பையில் 1.100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார் கஞ்சாவை பறிமுதல்  செய்து வழக்கு பதிவு செய்தனர் போலீசார் விசாரணை செய்த போது சூலூர் மதியழகன் நகர் 5வது குறுக்கு வீதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் என தெரிய வந்தது. மேலும் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே சந்தேகப்படும் படி கையில் பையுடன் நின்றிருந்த நபரை விசாரித்து பையை சோதனையிட்ட போது 5 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது கஞ்சாவை பறிமுதல் செய்து திருப்பூர் செட்டிபாளையம் அங்கேரிபாளையம் வேங்கமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (49) என்பவரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தென்னம் பாளையம் மேம்பாலத்திற்கு கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது TN 36 AV 5500 பதிவு எண் கொண்ட பஜாஜ் பல்சர் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை பிடித்து விசாரித்த போது 2.400 கிலோ கிராம் கஞ்சா விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது கஞ்சாவையும் வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கருமத்தம்பட்டி அவரங்காடு வீதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் பாபுராஜ் (24) கருமத்தம்பட்டி செகுடந்தாளி சென்னியாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் நாகராஜ், பிரதாப் நாயக் மகன் திபுநாயக் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்