மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் தொடர் வழிப்பறியில்  ஈடுபட்ட குற்றவாளிகள் கைது  
 



கோவை மாவட்டம் சூலூர், கோவில்பாளையம் மற்றும் மதுக்கரை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளில் தொடர்ந்து பகல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், மளிகை கடையில் தனியாக இருக்கும் பெண்களிடம் பொருள்கள் வாங்குவது போலவும் செயின் பறிப்பு  சம்பவம் நடைபெற்ற நிலையில் மேற்படி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 6 குற்ற சம்பவங்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி 6 குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *
திரு.பத்ரிநாராயணன்  உத்தரவின் பேரில், தனிப்படை காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த சிக்கந்தர் மகன் சதாம் உசேன் (33) மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் அப்துல் ரஹீம் (33) ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி 6 வழிப்பறி வழக்குகளின் சொத்துக்களான  18 சவரன் மற்றும் 5 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். ‌

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் தயங்காமல் அழைத்திடுங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என பத்ரிநாராயணன் எஸ்.பி தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்