மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூரில் 40 டன் ரேசன் அரிசி பறிமுதல்


சூலூர் அருகே உள்ள செலக்கரைச்சல் பகுதியில் தனியார்  கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது.
கோழிகளுக்கு தீவனத்திற்கு ரேஷன் அரிசியை பதுக்கி பயன்படுத்தி வருவதாக சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் பெயரில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன்,  தலைமையிலான போலீசார் மற்றும்
உணவு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் சந்திரசேகர்
கோழி பண்ணையில் சோதனை நடத்தினார்.
 அப்போது அங்கிருந்த குடோன் ஒன்றில் 40 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்நிலையில் கோழிப்பண்ணை உரிமையாளர் செந்தில்குமார் தலைமறைவாகிய நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்