மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வாயால் வடை சுடும் மத்திய அரசு
ஆனைமலையில் தி.மு.க. வினர் பிரச்சாரம்
பொள்ளாச்சி:- மார்ச்-08 மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாமல் வாயால் வடை சுடும் மத்திய அரசு என்று கூறி ஆனைமலையில் தி.மு.க. வினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் வாரியாக வீடுகள் தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சமீபத்தில் பிரசாரம் துவங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஆனைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மோடி சுட்ட வடை என்ற தலைப்பில் மத்திய அரசை விமர்சித்து துண்டு பிரசுரத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் ஆனைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் யுவராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அவர் பேசுகையில், மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று பத்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி இந்த நாட்டு மக்களுக்கு பயனுள்ள எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அடித்தட்டு மக்களை மறந்து விட்டு அம்பானி, அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை மேலும் கோடீஸ்வரர்களாக்கும் திட்டங்களை மட்டும் தான் செயல்படுத்தி உள்ளனர்.
காஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை தான் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு இங்குள்ள ஒவ்வொரு நிதி என்ன ஆச்சு. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னதும் நடக்கவில்லை.
இப்படி சொன்னதை எதையும் செய்யாமல் வாயால் வடை சுடுவதை மட்டுமே பா.ஜ.க. வினர் செய்து வருகின்றனர்.
இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லத்தான் வாயால் வடை சுடும் மோடி என்ற பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment