மக்கள் வெளிச்சம் நாளிதழ்
ஆசிரியையின் கணவர் போக்சோவில் கைது
கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் குடியிருந்து வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியை. இவருடைய வீட்டில் மாலை நேர டியூஷன் படிப்பதற்கு வரும் 11, மற்றும் 12, ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இவர் டிவிஷன் எடுத்து வந்துள்ளார். படிக்க வந்த மாணவிகளிடம் ஆசிரியரின் கணவர் குணசேகரன் வயது 40, இவர் மாணவிகளுக்கு அலைபேசியில் அழைப்பதும் ஆபாசமாக பேசுவதும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் வீட்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தினம் இதை வேலையாக செய்து கொண்டிருந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்கள். ஆகவே மாணவிகள் அறிவித்த தகவலின் பெயரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் கோட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் குணசேகரனை கைது செய்தனர்.
வால்பாறை நிருபர் ஐயப்பன்
Comments
Post a Comment