மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் கோவை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா



கோவை  மாவட்டம் தமிழ் மண்ணின் கலைகளை மக்கள் அனைவரும் களிப்போடு கொண்டாடும் வகையில்  வ.உ.சி மைதானத்தில்  கோவை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  தலைமையில் ,   தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  முன்னிலையில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தகவல்.
தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறை மூலம் தமிழ் மண்ணின் கலைகளை மக்கள் அனைவரும் களிப்போடு கொண்டாடும் வகையில், கோவை  மாவட்ட  வ.உ.சி மைதானத்தில்  வருகின்ற 10.02.2024 மற்றும் 11.02.2024 ஆகிய இரண்டு நாட்கள் கொங்கு நாட்டின் சுமார் 20 கலைக்குழுவினரின் நிகழ்ச்சிகளுடன் கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா   சிறப்பாக நடைபெறவுள்ளது. 
இவ்விழாவினை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  தொடங்கி வைத்து விழாப் பேரூரையாற்றவும்,  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  சிறப்புரையாற்றவும்  உள்ளனர். மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள வுள்ளனர்.
இவ்விழாவின் தொடக்கநாளான 10.02.2024 அன்று சின்னவேடம்பட்டி ஸ்ரீஅலமேலு மங்கம்மாள்- நஞ்சப்பன் குழுவினரின் நையாண்டி மேளம்,  நீலகிரி மலை அரசி- அம்சமல்லி குழுவினரின் தோடர் நடனம், சங்கரம் நாட்டியப்பள்ளியின்  சஸ்மிதா அரோரா குழுவினரின் பரதநாட்டியம், மேட்டுப்பாளையம் சேரன் துடும்பாட்டம்- சாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம், ருத்ராஞ்சநேயா- ருத்ரமூர்த்தி குழுவினரின் சிலம்பாட்டம், ஈரோடு முகில் கலை- தேவி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி , கதிரவன் கலைக்குழு- தியாகராஜன் குழுவினரின் பொக்கிஷம் நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் இரண்டாம் நாளான 11.02.2024 அன்று  நவரச நாட்டியாலயா – விஜயலட்சுமி குழுவினரின் பரதநாட்டியமும், மேட்டுப்பாளையம் கலைவாணி கிராமியக் கலைக்கழுவினரின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, தீரன் சிலம்பாட்டம்  -செல்வி தாரணி குழுவினரின் சிலம்பாட்டம், வாகராயம்பாளையம் – கோபால் குழுவினரின் ஸ்ரீ ஹரி கோபியரின் நாட்டுப்புறக் கோலாட்டம், பொள்ளாச்சி கண்ணாடி வெண்புறா- விஜயகுமார் குழுவினரின் ஜிக்காட்டம், அபிராமி நாட்டியாலயா – பரிமளம் வெங்கட்ராமன் குழுவினரின் பரதநாட்டியம், வீரமாத்தியம்மன் காளிதாஸ் குழுவினரின் பம்பை இசை நிகழ்ச்சி , அலேக்ரா கலைக் குழு – ஜெயந்தி நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, திருப்பூர் கவிநயா நாட்டியாலயா – மேனகா குழுவினரின் நாட்டிய நாடகம், நவகரை நவீன் பிரபஞ்ச நடனக் குழு- நவீன் குழுவினரின் வள்ளிகும்மி, மலுமிச்சம்பட்டி புகழ் சிலம்பம்- சரவணன் குழுவினரின் சிலம்பாட்டம், பூங்குயில் கலைமன்றம் – சீனிவாசன் குழுவினரின் பொங்கலோ பொங்கல் நாடகம்  ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  
இக்கலைநிகழ்ச்சிகள் இரண்டு நாட்களும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளன. இவ்விழாவில் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு, நம் தமிழ்மண்ணின் கலைகள்  தொடர்பான கலைநிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்குமாறு  மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்