மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை தெற்கு மாவட்ட பசும்பொன் தேசிய கழகத்தின் நீண்ட நாள் கனவு கோவை தெற்கு மாவட்ட தேவரினத்திற்கு சொந்தமாக ஒரு இடம் வேண்டும் என்பது இதற்காக பொள்ளாச்சியில் லோகநாயகி அம்மாள் அவர்கள் தனது பெற்றோர் மணியப்ப தேவர் குப்பாத்தாள் நினைவாக பசும்பொன் சித்தர் அறக்கட்டளைக்கு பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள சந்தேகவுண்டன் பாளையத்தில் அரை ஏக்கர் நிலம்(50 சென்ட் ) தானமாக கொடுத்ததை முறைப்படி பதிவு செய்யப்பட்டது. மேலும் அரை ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்ததோடு மட்டுமில்லாமல் ரூபாய் 5001 நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் அந்த இடத்தில் தேவர் திருக்கோயில் அமைக்கவும் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறும் வகையில் அறக்கட்டளை நற்காரியங்கள் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
Comments
Post a Comment