மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாள் விழா 

அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை


கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாளை முன்னிட்டு சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம், வையம்பாளையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக், வி.சி.ஆறுகுட்டி,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, அன்னூர் வட்டாட்சியர் நித்திலவள்ளி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிநாயுடுவின் மருமகன் இராமநாதன், பேரன்கள் திரு.காந்து, செந்தில் , சமூக நல ஆர்வலர்கள், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், எஸ்.எஸ்குளம் ஒன்றியகுழு உறுப்பினர்  கருப்புசாமி, எஸ்.எஸ்குளம் பேரூராட்சி தலைவர் கோமலவள்ளி கந்தசாமி, துணை தலைவர் மணி (எ) விஜயகுமார்,   மாவட்ட   கவுன்சிலர்  அபிநயா ஆறுக்குட்டி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராசு(எ)பழனிசாமி, வெள்ளானப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, துணை தலைவர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனலெட்சுமி,  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவை போற்றுகின்ற வகையில் இன்றையதினம் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு  சிறுவயதிலிருந்தே  விவசாயிகளுக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.  1925ஆம் ஆண்டில் பிறந்த அவர் தன்னுடைய 30-32 வயதிலே மிகப்பெரிய சாதனையை செய்தியிருக்கிறார். 
   விவசாய சங்கத்தின் தலைவராக இருந்த அவர்கள்  நம்முடைய மாநில விவசாயிகளுக்காகவும் மட்டுமல்லாமல்  பிற மாநிலங்களில் அங்கு வாழும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகவும்  குரல் கொடுத்தார்.  விவசாயிகளுக்கு மனதார பல்வேறு பணிகளை ஆற்றினார்கள். விவசாயிகள் அனைவரும் அவரை முழுமையாக நம்பினார்கள். அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை புரிந்திருப்பார். அவரின் பிறந்தநாளான இன்றைய நாளில்  தமிழக முதல்வரின் சார்பாகவும், அரசின் சார்பாகவும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என  அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்