மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மாவட்டத்தில் 33,659 12-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர் 

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வாழ்த்து




கோவை:-மார்ச்-01 கோவை  மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை
 127 தேர்வு மையங்களில் 33,659 மாணவ மாணவியர்கள் தேர்வெழுதுகின்றனர். மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி தகவல் 
கோவை  மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் மையமான சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாயின்போது முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி   உடன் இருந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 
2023-2024 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை நடைபெறவுள்ளது. கோவை  மாவட்டத்தில் 114 அரசுப் பள்ளிகள்,   39 அரசு உதவி பெறும் பள்ளிகள், 210 தனியார் பள்ளிகள் என மொத்தம் 363 பள்ளிகள் மூலமாக, 33,659 மாணவ மாணவியர்கள் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இவர்களில் 15,247 மாணவர்களும், 18,412 மாணவிகளும் என மொத்தம் 33,659 மாணவ மாணவியர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். இதில்  தனித்தேர்வர்கள் 725 பேரும் இத்தேர்வை எழுதுகிறார்கள். 
12ம் வகுப்புக்கான மேல்நிலைப் பொதுத் தேர்வு பள்ளி மாணவர்களுக்கு 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாட்களை பாதுகாப்பாக வைத்திட 14 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு 37 வழித்தட அலுவலர்கள் மூலம் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுற்றவுடன் தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை உரிய ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புடன் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 127 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 127 துறை அலுவலர்கள், 1784 அறைக் கண்காணிப்பாளர்கள்,  241 சொல்வதை எழுதுபவர்கள், 250 அலுவலக பணியாளர்கள், 250 நிலையான படை உறுப்பினர்கள்  என மொத்தம் 2830 ஆசிரியர்கள்/ அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  
மாற்றுத்திறனாளி மாணக்கர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்.  பள்ளி வளாகத்தில் தடையில்லா மின்வசதிகள், மற்றும் தேவையான அனைத்து அடிப்படை  வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் படித்த மாணவ மாணவிகள், படித்ததை நினைவில் நிறுத்தி, எவ்வித பதட்டமும், அழுத்தமின்றி சிறந்தமுறையில் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி  தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்