மக்கள் வெளிச்சம் நாளிதழ்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.
கோவை மாவட்டம் கொடிசியா அரங்கத்தில், நாளை (29-02-2024) நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநிலஅளவில் பணி நியமன ஆணைகள் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
கொடிசியா அரங்கு D ஹாலில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் வழங்கி, நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு (Mentorship Portal), நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி கனவு , முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சிகள் ஆகியவற்றை துவக்கி வைக்கவுள்ளார்கள்.
தொடர்ந்து, கொடிசியா அரங்கு A ஹாலில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசு செயலாளர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், ஆசிய தடகள மற்றும் சைக்ளிங் வீராங்கனைகள், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment