மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஊராட்சியில்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு 




பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூ. 9.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ.  ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாக்கினாம்பட்டியில் உடுமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 9.96 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், உடுமலை எம்.எல்.ஏ. வும் ஆன ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் அழகிரிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் அழகிரிராஜ் முன்னிலை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தார் சாலை, கான்கிரீட் சாலை, வடிகால், பேவர் பிளாக் கற்கள் பதித்தல் என மொத்தம் ரூ 72 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில்  பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜையும் போடப்பட்டது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்