மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை நடுமலை எஸ்டேட் தொழிலாளர்களை தாக்கிய மலைத் தேனீ
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவில் இன்று தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அருகில் இருந்து மலந்தேனீ . சக தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்கியதில் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர் உடனே தகவல் அறிந்த எஸ்டேட் நிர்வாகம் வாகனங்களை வரவழைத்து அருகிலுள்ள கருமலை எஸ்டேட் குரூப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மற்றும் எஸ்டேட் மேலாளர் கணேஷ் பாபு அமுதா கிரேசி நாகேஸ்வரி இந்திராணி நபிஷா ராஜகுமாரி வள்ளியம்மாள் சாந்தி தர்மலிங்கம் பரமசிவம் போன்ற நபர்களுக்கு மலந்தேனி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர் இதனால் கருமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ள நபர்களை வால்பாறை காவல்துறை நலம் விசாரித்து சிகிச்சை அளித்து வருவதைப் பற்றி நேரில் விசாரித்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை ஐயப்பன்
Comments
Post a Comment