மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
தருமபுரி மாவட்டம், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்
தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல், நிதியுதவி
தருமபுரி மாவட்டம். நல்லம்பள்ளி வட்டம் பாளையம் உள்வட்டம், தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்தில் கோவை, டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது56) க/பெ. கார்வின், விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல், ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment