மக்கள் வெளிச்சம் நாளிதழ்

22035 பேருக்கு நேரிடையாக வேலை வாய்ப்பு 

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  


 கோவை  மாவட்டத்தில் புதியதாக தொழில் துவங்க / விரிவுபடுத்த 211 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.6575.95 கோடி முதலீடு  செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை தொடங்கி வைத்ததையடுத்து,  கோவை  மாவட்டம் விளாங்குறிச்சி டைடல் பார்க் கூட்டரங்கில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கொடிசியா இன்டஸ்ட்ரில் பார்க் லிமிட் மேலாண் இயக்குநர் எஸ்.சௌந்தரராஜன், டைட்டில் பார்க் நிர்வாக செயலர் செல்வி எம்.கீதா, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர்கள் ஸ்ரீராஜேஸ்வரி, பிருந்தாதேவி, உதவிப்பொறியாளர் டைடல் பார்க் கணபதிசுந்தரம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் தலைமை ஆப்ரேட்டிங் அலுவலர் செந்தில்முருகன், தலைமை நிதி அலுவலர்  ஹரிபிரசாத், சிட்கோ கிளைமேலாளர் ஆர்.சண்முகவடிவேல், எல்காட் நிர்வாக அலுவலர் என்.தனலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு -2024 கோவை  மாவட்டத்தில் உள்ள அன்னூர் நவபாரத் தேசிய பள்ளி, காந்திபுரம் சுகுனா பெப், இடிக்கரை ஸ்ரீசைதன்யா டெக்னோ, வெள்ளலூர் எஸ்எஸ்விஎம் உலகம், காருண்யா நகர், கருண்யா சர்வதேச பள்ளி, காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனைமலை விஆர்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி அம்மானியம்மாள் பள்ளி, மேட்டுப்பாளையம் எம்பிஎல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பீளமேடு அரசு உயர்நிலைப்பள்ளி,சிறுமுகைபுதூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இருகூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி,தென்பொன்முடி  இஏபி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோவை  மாவட்டம், செய்தி மக்க்ள தொடர்புத்துறையின் அதிநவீனி மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. 
மாவட்ட ஆட்சியர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம்  எந்ததுறைகளில் வளர்ச்சி ஏற்படும்,  வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனததின் மூலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இந்நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில் வளர்ச்சி உருவாகும் என்பது குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாக இந்நிகழ்ச்சி இருந்தது. 
கோவை  மாவட்டத்தில் முதலீடு செய்யவுள்ள துறைகளில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் உற்பத்தி, மின்சார வாகனங்கள் / உதிரிபாகங்கள் உற்பத்தி,  எலக்ட்ரிகல்,  எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி,  விமான உதிரி பாகங்கள் உற்பத்தி இராணுவ தளவாடங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி,மருந்து பொருட்கள் உற்பத்தி , பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஜவுளி பொருட்கள் உற்பத்திமதிப்புக் கூட்டப்பட்ட கயிறு பொருட்கள் உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு சார்ந்த தொழில்கள் முக்கியமானவையாகும்.புதிய தொழில் துவங்க மற்றும் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர இடர் நீக்க குழு மூலம் தேவையான ஒப்புதல்கள் பெறவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021ன்படி, தகுதியான நிறுவனங்கள் உரிய அரசு மானியங்கள் பெறவும், கோவை  மாவட்ட தொழில் மையத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 தமிழ்நாட்டில் ஆட்டோ மொபைல் வாகனங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இனிவரும் காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட முதலீடு செய்துவருகின்றார்கள். நம்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 43 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில்  வேலைசெய்கின்றனர். இதனை பார்க்கும் மாணவிகளுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும். கோவை  மாவட்டத்தை சார்ந்த  211 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இனி வரும் ஆண்டுகளில் ரூ.6575.95 கோடி முதலீட்டில்  புதிய மற்றும் விரிவாக்கம் செய்ய முன்வந்துள்ளன. இதன் மூலம் 22.035 நபர்களுக்கு நேரிடையாக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்