மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு மாதம்
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்
மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி



பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்  15-1-24 முதல் 14-2-24 வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 
இதன் ஒரு பகுதியாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டது.
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற பேரணியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நகராட்சி ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில்  துவங்கிய இப்பேரணி   பாலக்காடு சாலை, பேருந்து நிலையம், கோவை ரோடு  வழியாக மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் நிறைவடைந்தது.
இதில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச்சென்றனர். பேரணியின்  இறுதியில், கடைப்பிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளை வலியுறுத்தி மாணவர்கள்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்  வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், பொள்ளாச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், உதவி வட்டார போக்குவரத்து அலுவலர் கோகுலகிருஷ்ணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்