மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தினவிழா 

மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி 
தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.




கோவை  மாவட்டம், வ.உ.சி மைதானத்தில்  நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலை 8.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் , மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன்  பொள்ளாச்சி சார்ஆட்சியர் கேத்ரின்சரண்யாமாநகர காவல் துணை ஆணையர்கள் ராஜராஜன், சுகாசினி, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எம்.கோகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்  பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 
பின்னர், கோவை மாநகர காவல் ஆணையரகத்தின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 67 காவலர்களுக்கும், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான 37  காவலர்களுக்கும் என மொத்தம் 104 பல்வேறு நிலையிலான காவலர்களுக்கு பதக்கங்களை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 133 காவல்துறை அலுவலர்களுக்கும் மற்றும் துறை தலைமை அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்,  பணியாளர்கள் உள்ளிட்ட 208 நபர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நடனமும், ஆர்.எஸ்புரம் சிடிஜி மாடல் பள்ளியின் மாணவ  மாணவயிர்களின் பங்காரா நடனமும், அன்னூர் கேஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நிகழ்ச்சியும், இராஜவீதி சிசிஎம்ஏ அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின்  பாடல் நிகழ்ச்சியும், ப்ரசண்டேஷன் கான்வென்ட்  பள்ளி மாணவியர்களின் பாடல் நிகழ்ச்சியும், சிஎஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் நாட்டுப்புற நடனமும், சுங்கம் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடல் நிகழ்ச்சியும்,  ஆர்.எஸ்புரம் நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின்  பாட்டு மற்றும் நடன நிகழ்ச்சியும், அல்வேனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  மாணவ மாணவியர்களின் பாட்டு நிகழ்ச்சியும், சேரன் மாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  மாணவ-மாணவியர்களின் கும்மி நாட்டுப்புற நடனமும், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஆர்வமுடன்  கண்டு களித்தனர். 
அதனைத்தொடர்ந்து, சிறப்பாக கலைநிகழ்ச்சிகள்  மேற்கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்