மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை வ உ சி மைதானத்தில் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள்
கோவை மாவட்டம்
குடியரசு தினம் -2024 தினவிழா
வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
குடியரசு தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் (26.01.2024) அன்று நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் காலை 08.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
மேலும், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நடனமும், ஆர்.எஸ்புரம் சிடிஜி மாடல் பள்ளியின் மாணவ மாணவயிர்களின் பங்காரா நடனமும், அன்னூர் கேஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நிகழ்ச்சியும், இராஜவீதி சிசிஎம்ஏ அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் பாடல் நிகழ்ச்சியும், ப்ரசண்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவியர்களின் பாடல் நிகழ்ச்சியும், சிஎஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் நாட்டுப்புற நடனமும், சுங்கம் நிர்மலா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடல் நிகழ்ச்சியும், ஆர்.எஸ்புரம் நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் பாட்டு மற்றும் நடன நிகழ்ச்சியும், அல்வேனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் பாட்டு நிகழ்ச்சியும், சேரன் மாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களின் கும்மி நாட்டுப்புற நடனமும், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் திரளாக பங்கு கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும், கோவை மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
Comments
Post a Comment