மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா



பொள்ளாச்சி:-ஜன-11
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா சக அலுவலக பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்
ஆண்டு முழுவதும் உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை  கொண்டாடப்பட்டு  வருகிறது
தமிழக முழுவதும் கிராமப்புறத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் இல்லங்களை புதுப்பித்து கால்நடைகளை ஆறுகள் குளங்களில் நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி வீட்டு வாசலில் கோலமிட்டு புது பானையில் மஞ்சள் கட்டி கரும்பு வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்வர் 
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை அரசு அலுவலகங்களிலும் கொண்டாடும் வகையில் வருடம் தோறும் போகி பண்டிகைக்கு முதல் நாள் பொங்கல் விழா நடத்தப்படுகிறது
அதை ஒட்டி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அலுவலகத்தில் பணி புரியும் சக ஊழியர்களுடன் அலுவலக வளாகத்தில் புது பானை வைத்து பொங்கல் வைத்து கொண்டாடினார்
கலந்து கொண்ட அனைவரும் பாரம்பரிய உடைகளான பட்டு வேட்டி சேலைகள் அணிந்து பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்