மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா
வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் சந்தேகவுண்டன் பாளையத்தில் கொண்டாடப்பட்டது விழாவில் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து தமிழ் திருமுறைப்படி யாகசாலை வேள்வி சிறப்பு பூஜைகள் முடித்து மகளிர் அணி சார்பில் அடக்கி அம்மன் வள்ளி கும்மி மற்றும் தீபம் வள்ளி கும்மி குழுக்களின் வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது விழாவில் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் பசும்பொன் தேசிய கழகத்தின் நிகழ்ச்சிகள் மாவட்ட செயலாளர் மகேந்திர பிரபு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பசும்பொன் தேசிய கழகத்தின் நிர்வாகிகள் உட்பட. 250க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொண்டனர் விழா ஏற்பாடுகளை பசும்பொன் தேசிய கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்
Comments
Post a Comment