மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை நீலாம்பூரில் 54 கிலோ கஞ்சா பறிமுதல்  

ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு 




 கோவை நீலாம்பூர் பைபாஸ் குளத்தூர் பிரிவு பகுதியில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் இரவு ரோந்துப் பணியில் இருந்த போது அங்கே சந்தேகத்திற்கிமாக இருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் கையில் இருந்த மஞ்சள் பையை சோதனையிட்ட போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது மேலும் அவர்களை விசாரித்த போது அவர்களது வீட்டில் விற்பனைக்காக பதிக்கி வைத்திருந்த 49 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது  அவற்றையும் பறிமுதல் செய்தார் ஆய்வாளர் மாதையன் அப்போது மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் நாகராஜ் தப்பியோடி விட்டார் மதுரை முத்துப்பட்டி வீரமுடையான் வீதியைச் சேர்ந்த மூக்கசாமி மகன் கருப்புச்சாமி(45) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர் மேலும் தப்பியோடிய நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள், கடத்துபவர்களை அதிரடியாக நடவடிக்கை எடுத்து வரும் காவல் ஆய்வாளர் மாதையனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று பாராட்டினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்