மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரியில் 19-ம் பட்டமளிப்பு விழா
  



கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவன தலைவர் வி. வசந்தகுமார் தலைமை தாங்கினார் .கல்லூரி முதல்வர் வி. குமார் சின்னையன் 
சிஇஓ .கே.முருகையா அறங்காவலர் தமயந்தி.கற்பகம் தொழில்நுட்ப அகாடமி இயக்குனர் கே எஸ் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் அக்வாசப் நிறுவன துணைத் தலைவர் வி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார் அப்போது அவர் கூறும்போது உறுதியான திறன்மிக்க அனைவரையும் உள்ளடக்கிய புதிய இந்தியா தற்போது உருவாகி வருகிறது உலக அளவில் இந்தியா அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறது . 
எனவே இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியம், எனவே அரசு வழங்கும் சலுகைகளை மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு மாணவர்களும் தான் சார்ந்த துறையில் சாதித்துக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் தொழில் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கிறது உலக அளவில் இந்திய நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டு முன்னேறுகின்றன இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இன்றைய மாணவர்கள் தங்களது முழு திறமையும் நாட்டுக்கு அர்ப்பணித்து தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் அதேபோல் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை எந்த சூழ்நிலையும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்திட கூடாது தமிழகத்தின் முதியோர் இல்லங்களில்  கோவை திகழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அத்தகைய நிலையில் நமது பெற்றோர்களை தள்ளிவிடக் கூடாது என்பதை மாணவர்கள் கருத்தில் கொண்டு எதிர்கால இந்தியாவை வளமான இந்தியாவாக மாற்றிக் காட்டிட வேண்டும் என்று பேசினார் இதில் ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கி பாராட்டு பெற்றனர் .இந்த விழாவில் பேராசிரியர் மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்