மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில்
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர திமுக மற்றும் சதுரங்க சங்கம் ஆகியன சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழா ஆகியனவற்றை முன்னிட்டு நகர தி.மு.க. மற்றும் சதுரங்க சங்கம் ஆகியன இணைந்து மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தின. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில அளவிலான கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ஆகியன நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,056 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகர தி.மு.க. செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணை செயலாளர் தர்மராஜ், என்.ஜி.எம். கல்லூரியின் முதல்வர் முத்துக்குமரன், மகாலிங்கம் கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் கண்ணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ், வழக்கறிஞர் இமயவரம்பன், முதல் உதவி சமூக நல அறக்கட்டளையின் தலைவர் இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Comments
Post a Comment