மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் 5-கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு   மையம்
 
அமைச்சர் சு.முத்துச்சாமி அடிக்கல் நாட்டினார்.



கோவை  மாவட்டம், சூலூர் வட்டம், காடுகுட்டை பகுதிக்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அனுப்பும் வகையில் ரூ.5.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையத்தையும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளக்கா பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தையும்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  சு.முத்துசாமி  திறந்து வைத்து, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
 இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதிகிருஷ்ணன், பொள்ளாச்சி சார்ஆட்சியர்(பொ) ப.சுரேஷ், நகராட்சி ஆணையாளர் சுப்பையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி  அலுவலர் முத்துராஜ், தமிழ்நாடு மின்சாரத் துறை கோட்டப் பொறியாளர் பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயனி( குள்ளக்காபாளைம்) கோமதி(பட்டணம்), குள்ளக்காபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சூலூர் வட்டம், காடுகுட்டை பகுதிக்கு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அனுப்பும் வகையில் ரூ.5.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையத்தையும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளக்காபாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தையும்  அமைச்சர்  சு.முத்துசாமி திறந்து வைத்து, ரூ.2கோடி மதிப்பீட்டில் நெகமம் மார்க்கெட் கமிட்டி கட்டடத்திற்கும், பொள்ளாச்சி நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் பின்புறம் விளையாட்டு மைதானத்தில்  ரூ.5 கோடி மதிப்பீட்டில்  பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும்,  பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில்  பொள்ளாச்சியில், ரூ.37.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடப ;பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   
பின்னர் அமைச்சர்  சு.முத்துசாமி  தெரிவித்ததாவது, தமிழக முதல்வர்  அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டுவருகின்றார்கள். அதன்படி, நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை அறிவித்தார். தற்போது இத்திட்டத்தின் ஏழைபெண்கள் பயனடைந்து வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பின்போது மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள்.அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனால் பெண்களுடைய சேமிப்பு அவர்களுடைய குடும்பத்திற்கு முழுமையாக சென்றடையும். பெண்களின் சேமிப்பானது, அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுடைய குடும்பத்திற்கும் பயன்படும். 
பெரும்பாலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள்,; அந்த மாணவர்;கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்போடு, படிப்பினை நிறுத்தி விடுகிறார்கள். பொருளாதார சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல நேரிடுகிறது. இதுபோன்ற நிலையில் உள்ள மாணவிகள் பயன்பெறும் வகையில்,  தமிழக முதல்வர் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயிலும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண்கள் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவிலே வேறு எங்கும் இல்லாத வகையிலான இத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்கள். இத்திட்டத்தின்  மூலம் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  
அரசுப்பள்ளியில் பயிலும், குழந்தைகள் உடல்நலனை கருத்தில்கொண்டு,  வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் ஐந்து வகையான உணவுகள்; வழங்கும், காலை உணவு திட்டம்  மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது காலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்களுக்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் குழந்தைகள் தினமும் காலை உணவை உண்பதால் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்தந்த துறைகளில் சிறப்பாக வருவார்கள் என்பதை பெற்றொர் தெரிந்து வைத்திருப்பதை விட  ஆசிரியர்கள்தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனவே, படிப்பு மட்டுமல்லாதது, விளையாட்டுத் துறையிலும் அவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.  இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாகவும், திறமைவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.  அவர்கள் உயர்ந்த நிலைக்கு வரவாய்ப்பு உள்ளது.  எனவேதான்,  ஒவ்வொரு  தொகுதியிலும்; ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கவேண்டும்.   என  தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்கள். 
நடப்போம் நலம்பெறுவோம்  என்ற திட்டத்தை   தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  நடப்பதின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 8 கி.மீதூரம் நடைப்பயணம் மேற்கொள்ளும் இத்திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளது என  அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்