மக்கள் வெளிச்சம் நாளிதழ்
டெங்கு பாதிப்பில்லாத நகரமாக மற்ற முயற்சி
பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் உறுதி
பொள்ளாச்சி நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு முகாமில், டெங்கு பாதிப்பில்லாத நகரமாக மற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உறுதி அளித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 2வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் வீதியில் உள்ள சித்த மருத்துவமனையில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. அதோடு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசங்கரங்களும், கபசுர குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பேசுகையில், மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் சுகாதாரப் பிரிவு மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு பாதிப்பே இல்லாத நகரமாக மாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் இந்த சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள் தோறும் இரண்டு வார்டுகள் என இம்முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ், நெசவாளர் அணியின் முன்னாள் மாவட்டத் துணை அமைப்பாளர் விஜயகுமார், நகராட்சி கவுன்சிலர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment