மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி வன சரகத்தில் இறந்த ஆண் சிறுத்தை 

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், பொள்ளாச்சி வளச்சரகம், சேத்துமடை மேற்கு பிரிவு, போத்தமடை சுற்றிற்குட்பட்ட ஐயப்பன் கோவில் சராகப் பகுதியில்  மதியம் சுமார் 01.25 மணியளவில் களப்பணியாளர்கள் அன்றாட ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த போது ஐயப்பன் கோவில்
பகுதியில் ஆண் சிறுத்தை ஒன்று கீழே படுத்த படி கிடப்பது கண்டறியப்பட்டு இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. உடன் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அவர்களுக்கும் மற்றும் துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம். பொள்ளாச்சி, தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி  உத்தரவின் படியும், துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி  அறிவுரையின் படியும் வே. செல்வம், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் இணை இயக்குநர், அட்டகட்டி பயிற்சி மையம்  தலைமையில் வே. புகழேந்தி வனச்சரக அலுவலர், பொள்ளாச்சி வனச்சரகம். இயற்கை வரலாறு அறக்கட்டளை வி. திருமலைச்சாமி மற்றும் WWF ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் டாக்டர். விஜயராகவன், வனக்கால்நடை உதவி மருத்துவர், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி மற்றும் டாக்டர். கோவிந்தராஜன், அரசு கால்நடை உதவி மருத்துவர், சேத்துமடை ஆகியோரால்  இறந்த ஆண் சிறுத்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சிறுத்தையின் உடலில் அனைத்து பற்களும், நகங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இறந்த சிறுத்தையானது வேறு விலங்குடன் சண்டையிட்டதால் இறந்திருக்கலாம் எனவும், இறந்த சிறுத்தையின் சுமார் வயது 7 ஆக இருக்கலாம் எனவும் கால்நடை மருத்துவ அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுத்தையின் உடலினை முழுவதுமாக தீயிட்டு எரிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்