மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர், நாகராஜபுரம், வெள்ளிங்கிரி வீதியைச் சேர்ந்த கார்த்திக்- கார்த்திகா அவர்களின் மகன் செல்வன். குகன்ராஜ் (வயது 6) நாகராஜபுரம் அரசு துவக்கப் பள்ளியில் நேற்று (06.10.2023) எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததைடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07.10.2023) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் அக்குழந்தையின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.50,000 - க்கான காசோலையினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப, மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, தொண்டாமுத்தூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தொண்டாமுத்தூர் அ.ரவி ஆகியோர் உள்ளனர்.
Comments
Post a Comment