மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சூலூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா  




கோவை மாவட்டம் சூலூர் பசும்பொன் கல்வி பண்பாடு அறக்கட்டளையின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஜெயந்தி விழா அறக்கட்டளை தலைவர் புதூர் தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது.  பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் வரவேற்புரையாற்றினர்  எஸ்.பி.எஸ் தண்டபாணி, வெங்கடலட்சுமி சுப்பிரமணியம், கற்பகம்.                   மணிவண்ணன், புவனாடிராவல்ஸ் சுரேஷ், கோபி, சக்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர் சிறப்பு விருந்தினராக சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் த.மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் பசுமை நிழல் விஜயகுமார், மேகநாதன், திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல்,P. சிவகுமார் மற்றும் கோவை மாவட்ட தேவர் பேரவை நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தி தேவர் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக எஸ்.ஏ. சேகர் நன்றி கூறினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்