மக்கள் வெளிச்சம் நாளிதழ்

போலி பத்திரிகையாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 


 கோவை மாவட்டத்தில் 
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது  தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – 
மாவட்ட ஆட்சியர்   கிராந்தி குமார் பாடி  எச்சரிக்கை
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாக புகார் மனுக்கள் வரபெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.  
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது.  அந்த நபர்கள் கண்டறியப்படும்பட்சத்தில்  அவர்கள் மீது  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு   அளிக்கும் வகையில்    பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிக்கையாளர் என்ற பெயரில்  சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள்,  உடனடியாக 9498042423 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு  தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால்,  அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர்  கிராந்தி குமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்